மெக்சிகோ பார் தீ விபத்து – பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

மெக்சிகோ நாட்டின் வெராகுரூஸ் மாநிலத்தில் கோட்சாகோல்காஸ் துறைமுக நகரில் எல் காபலோ பிளான்கோ என்ற பார் செயல்பட்டு வருகிறது.

ஆகஸ்டு 27ம் தேதி இந்த பாரில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 8 பெண்கள், 15 ஆண்கள் என மொத்தம் 23 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியானார்கள். மேலும், 13 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 7 பேர் பலியாகினர். இதையடுத்து, பாரில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools