மெக்சிகோ குடும்ப விழாவில் துப்பாக்கி சூடு – 13 பேர் பலி
மெக்சிகோ நாட்டின் வேராகர்ஸ் மாகாணம் அமைந்துள்ளது. வேராகர்ஸ் மாநிலத்தில் உள்ள மினாடிட்லன் நகரில் குடும்ப விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஒரூ மர்ம நபர் திடீரென அங்கு புகுந்தார். அவர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுடத்தொடங்கினார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு குழந்தை, 5 பெண்கள், 7 ஆண்கள் என மொத்தம் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தியது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.