Tamilவிளையாட்டு

மெக்சிகோ ஓபன் டென்னிஸ் – ரபெல் நடால் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

மெக்சிகோ ஓபன் டென்னிஸ் அகாபுல்கோவில் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதி ஒன்றில் நட்சத்திர வீரரான ரபேல் நடால் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை எதிர்கொண்டார்.

இதில் நடால் 6-3, 6-2 என எளிதில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், சக வீரரான ஜோன் இஸ்னெருடன் மோதினார். இதில் 2-6, 7-5, 6-3 என்ற கணக்கில் பிரிட்ஸ் வெற்ரி பெற்று இறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ரபேல் நடாலும், டெய்லர் பிரிட்சும் மோதுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *