பிரபல இயக்குனர் கவுதம்மேனன் இயக்கத்தில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சமந்தா.இப்படத்தின் தெலுங்கு மொழிபெயர்ப்பில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்து தெலுங்கு ஹீரோயின் ஆகவும் மாறினார்.
அதன்பின்னர் விஜய், சூர்யா போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்தார். விஜயுடன் சமந்தா ஜோடியாக நடித்த ‘கத்தி’, ‘மெர்சல்’ போன்ற படங்கள் தொடர் வெற்றி அடைந்தது. புஷ்பா படத்திற்கு பிறகு, சமந்தா ‘மயோசிட்டிஸ்’ என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார். தற்போது அதில் இருந்து மீண்ட அவர் மீண்டும் நடிக்க தொடங்கினார்.
சினிமாவில் இருந்து விலகி அவ்வபோது சிகிச்சை பெற்று வரும் சமந்தா அடிக்கடி சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களோடு உரையாடி வருகிறார்.
இந்த நிலையில், உடல் ரீதியாக தான் எதிர்கொண்ட சவால்கள் பற்றி அவர் கூறியதாவது:-
நான் ‘குஷி’ படத்தை முடித்து விட்டு ‘சிட்டாடல்’ தொடர் படப்பிடிப்பில் பங்கேற்றேன். இப்படத்தில் மிகவும் உடல் ரீதியானதாக இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. படத்தில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருந்தது. அதனால் மிகவும் கடினமாக இருந்தது. ஒரு அதிரடி காட்சி யில் மூளை அதிர்ச்சி ஏற்பட்டு மயக்கம் அடைந்தேன்.
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.