X

மூன்று வேடங்களில் நடிக்கும் சந்தானம்

தமிழ் சினிமாவில் காமெடியனாக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து வலம் வருகிறார். இவர் நடித்த ‘தில்லுக்கு துட்டு’, ‘சக்க போடு போடு ராஜா’, ‘தில்லுக்கு துட்டு 2’ போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. சமீபத்தில் வெளியான ‘ஏ1’ திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்தது.

ஷங்கரின் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய விஜய் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டகால்டி’ படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில், சந்தானத்தின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கார்த்திக் யோகி இயக்கும் புதிய படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறார்கள். இதன் டைட்டில் லுக் போஸ்டர் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.