மூன்று விதமான கிரிக்கெட்டிலும் அற்புதமான ஆட்டத்தை ஜடேஜா வெளிப்படுத்துகிறார் – ரோகித் சர்மா பாராட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 243 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் :

நாங்கள் கடந்த மூன்று போட்டிகளாகவே மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறோம். இங்கிலாந்து அணிக்கு எதிராக நாங்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தோம். துவக்கத்திலேயே விக்கெட்டை இழந்திருந்தாலும் டீசன்ட்டான ரன் குவிப்பை வழங்கினோம். அதன் பின்னர் பவுலர்கள் தங்களது வேலையை சிறப்பாக செய்து வெற்றியை தேடி தந்தனர்.

விராட் கோலி போன்ற ஒரு வீரர் சூழலை கணக்கில் கொண்டு விளையாட வேண்டும் என்று நாங்கள் நினைப்போம். அந்த வகையில் இந்த போட்டியில் அவர் அற்புதமாக விளையாடி இருந்தார். ஷ்ரேயாஸ் ஐயரின் மீது நாங்கள் வைக்கும் நம்பிக்கைக்கு அவர் சரியாக செயல்பட்டு வருகிறார். கடந்த இரண்டு போட்டிகளாகவே அவர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவர் மீது நாங்கள் இன்னும் நம்பிக்கை வைப்போம்.

முகமது ஷமி அணிக்குள் வந்ததிலிருந்தே அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். சுப்மன் கில்லும் நானும் மைதானத்தின் தன்மைக்கு ஏற்றவாறு விளையாடுகிறோம். நாங்கள் இந்த ஆண்டு நிறைய போட்டிகளில் ஒன்றாக விளையாடி உள்ளதால் எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. அதேபோன்று ஜடேஜா எங்கள் அணிக்கு ஒரு முக்கியமான வீரர். ஏனெனில் கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணியின் மூன்று விதமான வடிவத்திலும் அவர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools