டி20 உலக கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற பும்ரா, இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
இந்நிலையில் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் உலகின் சிறந்த பவுலராக பும்ரா திகழ்வதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
3 வடிவிலான கிரிக்கெட்டிலும் உலகின் சிறந்த பவுலராக பும்ரா இருக்கிறார். பும்ரா புதிய பந்தை பயன்படுத்தி அதி வேகமாக வீசுகிறார். இதுபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியான லென்த் மற்றும் லைனில் பந்தை தொடர்ந்து வீசுகிறார். இதைப் போன்று வெள்ளை நிற கிரிக்கெட் பந்தையும் அவர் அபாரமாக வீசி நெருக்கடி கொடுக்கின்றார். பும்ராவை நீங்கள் பந்துவீச்சு தொடக்கத்திலும் பயன்படுத்தலாம். இதே போன்று டெத் ஓவரிலும் பயன்படுத்தலாம். ஒரு ஓவருக்கு 12- 13 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இறுதி கட்டத்தில் பேட்ஸ்மேன்கள் இருந்தால் அபாரமாக யாக்கர்கள் வீசுவார். இந்த பந்துகளை எதிர்கொள்வது மிகவும் கடினம். எனவே பும்ரா எந்த காலத்திலும் ஒப்பிட்டு பார்த்தால் அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர் தான்.
பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கை முன்னேறி வருவதை நான் பார்த்து சந்தோஷப்படுகிறேன். பும்ராவுடன் இணைந்து பணியாற்றியதும், அவர் வீசும் போது கிரிக்கெட் வர்ணனையும் செய்வதையும் நான் மகிழ்ச்சியுடன் செய்கின்றேன். இதைப் போன்று ரோகித் சர்மா சிறந்த கேப்டனாக விளங்குகிறார். பும்ராவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று ரோகித் சர்மாவுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.
இவ்வாறு பிரெட் லீ கூறினார்.