தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 17 வருடங்களாக நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தமிழ், தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். கடந்த வருடம் வெளிவந்த ‘96’ படத்திற்கு பிறகு திரிஷா மீண்டும் முன்னணிக்கு வந்தார். அவர் தமிழில் நாயகியாக நடித்துள்ள நான்கு படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
இந்நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவி அடுத்து நடிக்கும் படத்திலும், மலையாளத்தில் மோகன்லால் அடுத்து நடிக்க உள்ள படத்திலும் திரிஷா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
மேலும், மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் திரிஷா நடிக்க உள்ளார் என்கிறார்கள். ஒரே சமயத்தில் மூனறு மொழிகளில் பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு திரிஷாவுக்குக் கிடைத்துள்ளது.