X

மூன்றாவது முறையாக விஜய் படத்தில் நடிக்கும் பூவையார்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பூவையார். அந்நிகழ்ச்சியில் கனா பாடல் பாடி ரசிகர்களை கவர்ந்த இவருக்கு முதல் பாடல் பாடும் வாய்ப்பை பிகில் படம் மூலம் ஏ.ஆர்.ரகுமான் வழங்கினார். அப்படத்தில் இடம்பெறும் வெறித்தனம் பாடலுக்கு விஜய்யுடன் நடனமாடியும் அசத்தி இருப்பார் பூவையார்.

இதையடுத்து விஜய் நடிப்பில் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் மாஸ்டர் படத்திலும், பூவையார் நடித்திருந்தார். இப்படத்தில் விஜய்யுடனே பயணிக்கும் அவரது கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில், தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள ‘தளபதி 65’ படத்திலும் பூவையார் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் விஜய்யுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக பூவையார் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.