மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த ஏர் கண்டிஷனரால் இளைஞர் பலி

டெல்லியின் கரோல் பாக் பகுதியில், மூன்றாவது மாடியில் இருந்து ஏர் கண்டிஷனர் விழுந்ததில் 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து ஆகஸ்ட் 17 ஆம் தேதி மாலை 7 மணியளவில் நடந்துள்ளது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், தனது பைக்கில் அமர்ந்தவாறு ஒரு இளைஞர் தனது நண்பருடன் பேசி வருகிறார். அப்போது ஏர் கண்டிஷனர் ஒன்று திடீரென்று பைக்கில் அமர்ந்திருந்த இளைஞரின் தலைமேல் விழுந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிந்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools