Tamilசினிமா

முரளிதரன் பயோபிக் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகல் – இயக்குநர் சீனு ராமசாமி வரவேற்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படம் உருவாக இருந்தது. இதில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்திற்கான எதிர்ப்பும் அதிகரித்தது. இந்த படத்தில் நடிக்கும் முடிவை விஜய் சேதுபதி கைவிட வேண்டும் என இயக்குனர் சீனு ராமசாமி கோரிக்கை வைத்தார். மேலும் பாரதிராஜா, சேரன் உள்ளிட்டோரும் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில், இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்து முரளிதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள விஜய் சேதுபதி, முரளிதரனின் அறிக்கையை குறிப்பிட்டு நன்றி வணக்கம் என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி விலகியதை தொடர்ந்து, ‘தனது ஹீரோ அந்தஸ்தை உயர்த்திக் காட்ட நினைக்காமல் எப்போதும் போல எளிமையாக நன்றி வணக்கம் என்று தன்னை நாடி வந்தவருக்கு விடை தந்து தமிழ் மக்களின் அன்புக்கு அமைதி வழியில் மேன்மை செய்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்கள்’ என்று இயக்குனர் சீனு ராமசாமி கூறியிருக்கிறார்.