மும்பை விமான நிலையத்தில் ரூ.6 கோடி மதிப்பிலான தங்கம் சிக்கியது!

மும்பை விமான நிலையத்துக்கு நேற்று மாலை துபாயில் இருந்து விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது அவரது டிராலி பேக்கின் பக்கவாட்டில் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு தைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் டிராலி பேக்கில் தையலை பிரித்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதில் 44 தங்க கட்டிகள் சிக்கின. இந்த தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.6 கோடியே 74 லட்சம் என தெரியவந்தது.

இந்த தங்க கட்டிகள் கடத்தல் சம்பவம் குறித்து போலீசார் பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools