Tamilசெய்திகள்

மும்பை பங்குசந்தை 221 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது

மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் நேற்று குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 57,996.68 புள்ளிகளுடன் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு பங்குச்சந்தை தொடங்கியதும் 221 புள்ளிகள் உயர்ந்து 58,217.69 புள்ளிகளுடன் வர்த்தகமானது.

தற்போது 9.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 117.11 புள்ளிகள் சரிந்து 57,879.57 புள்ளிகளுடன் வர்த்தகமாகிறது.

அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி இன்று காலை 9.30 மணி நிலவரப்படி 7.60 புள்ளிகள் சரிந்து 17,314.60 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

ஆக்சிஸ் வங்கியின் புள்ளிகள் சரிந்து காணப்பட்டன. டாடா மோட்டார்ஸ், சிப்லா, இந்தியா விக்ஸ்,  டாடா கன்ஸ்யூமர், ஹீரோ மோட்டோ கார்ப் ஆகிய பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.

பங்குச்சந்தை இன்று காலை உயர்வுடன் தொடங்கிய நிலையில் தற்போது சரிவை கண்டு வருகிறது.