மும்பை இந்தியான்ஸுக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் – பிராவோ சாதனையை சமன் செய்த மோஹித் சர்மா

ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 169 ரன்கள் சேர்த்தது. மும்பை இந்தியன்ஸ் அணியால் 162 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 12-வது முறையாக முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியின் கடைசி கட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மா சிறப்பாக பந்து வீசினார். அவர் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 33 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதற்கு முன்னதாக வெயின் பிராவோ 33 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். தற்போது மோகித் சர்மா பிராவோ உடன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை பகிர்ந்தள்ளார். அஸ்வின் 26 விக்கெட்டுகளும், சாஹல், சாவ்லா, அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 25 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools