மும்பை இந்தியன் அணியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லுக் வுட் சேர்ப்பு
ஐபிஎல் 2024 சீசன் டி20 கிரிக்கெட் திருவிழா தொடங்குவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், 10 அணிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றன. தங்களது அணியில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் உடனடியாக மாற்று வீரரை தேர்வு செய்து, அணியை தயார் படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெரேண்டர்ஃப் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக இங்கிலாந்தை சேர்ந்த லூக் வுட்-ஐ மாற்று வீரராக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைத்துள்ளது.
இடது கை வேகப்பந்து வீச்சாளரான வுட் இங்கிலாந்து அணிக்காக ஐந்து டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 50 லட்சம் ரூபாய் விலைில் வுட்டை அணியில் இணைத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்து சீசனில் சிறப்பாக செயல்பட்டார். ஆர்ச்சர், பும்ரா இல்லாத நிலையில் 12 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
வருகிற 22-ந்தேதி ஐபிஎல் 17-வது சீசன் தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே)- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மார்ச் 24-ந்தேதி மும்பை அணி தனது முதல் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது.