மும்பை இந்தியன்ஸ் அணியில் சுழற்பந்து பலவீனமாக உள்ளது – வாசீம் ஜாபர் பேச்சு

ஐபிஎல் 2023-ம் ஆண்டு தொடருக்காக மும்பை அணி மீண்டும் பெரிய தவறை செய்துள்ளதாக வசீம் ஜாஃபர் சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளார். அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் நவம்பர் 23ம் தேதியன்று நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது.

இதில் அனைத்து அணிகளும் முன்னணி வீரர்களை கூட விடுவித்து பெரிய முடிவுகளை எடுத்திருந்தது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறை கோப்பையை வெல்ல பெரும் வியூகத்தை அமைத்துள்ளது. மும்பை அணி பட்டியல் ஆஸ்திரேலிய வீரர் ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் மீண்டும் மும்பை அணியிலேயே இணைந்துள்ளார்.

ஆர்சிபி அணிக்காக கடந்தாண்டு விளையாடிய அவரை ட்ரேடிங் முறையில் மும்பை அணி வாங்கியுள்ளது. இடதுகை வேகப்பந்துவீச்சாளரான அவர் மும்பை அணியில் ஜஸ்பிரித் பும்ராவுடன் இணைந்தால், ட்ரெண்ட் போல்ட் இருந்த போது ஏற்படுத்திய தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இந்நிலையில் மும்பை அணி சுழற்பந்து வீச்சில் வீக்காக உள்ளது என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசீம் ஜாபர் பேசியுள்ளார்: இது குறித்து அவர் கூறியதாவது:-

பெஹ்ரண்டோர்ஃப் மற்றும் பும்ரா நல்ல காம்போ தான். ஆனால் அவர்களுடன் இருக்கும் ஜோஃப்ரா ஆர்ச்சர் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் பெரிய பிரச்சினை.

ஏனென்றால் உலக தரத்தில் வேறு வேகப்பந்துவீச்சாளர் இல்லை. இந்திய இளம் வீரர் ஆகாஷ் மாத்வால் சற்று சிறப்பாக செயல்படுவார். இதே போல சுழற்பந்துவீச்சிலும் மும்பை வீக்காக உள்ளது. மயங்க் மார்காண்டே, முருகன் அஸ்வின் உள்ளிட்ட ஸ்பின்னர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆஃப் ஸ்பின்னர் ஹிர்திக் சோக்கீன் மிகக்குறைவான போட்டியிலேயே ஆடியுள்ளர். மேலும் வான்கடேவில் ஆஃப் ஸ்பின் எடுபடாது. குமார் கார்த்திகேயா ஓரளவிற்கு சிறப்பாக உள்ளார். ஆனால் வரும் ஏலத்தில் மும்பை அணி நிச்சயம் பெரிய வீரருக்காக பணத்தை செலவளித்தாக வேண்டும்.

உள்ளூர் வீரர் தேவை இதே போல அயல்நாட்டு ஸ்பின்னர்களை வாங்கக்கூடாது. ஏனென்றால் டிம் டேவிட் நிச்சயம் ஆடுவார். ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், ஆர்ச்சர், பெஹண்டோர்ஃப் ஆகியோரும் ஆடுவார்கள். இப்படி இருக்கையில் ப்ளேயிங் 11-ல் அயல்நாட்டு ஸ்பின்னர் சூட் ஆக மாட்டார். எனவே இந்தியாவின் முன்னணி ஸ்பின்னர்களுக்கு தான் வலைவிரிக்க வேண்டும் என வசீம் ஜாஃபர் கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools