Tamilவிளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் தோல்வி ஏன்? – ஷேன் வாட்சன் பதில்

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வலிமையான அணிகளாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தொடர் தோல்விகளால் திணறுகிறது. முதல் 4 போட்டிகளில் தோல்வியடைந்த
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்தது. மும்பை இந்தியன் அணியோ முதல் 5 போட்டிகளிலும் தோல்வி அடைந்து மிக மோசமான சாதனையை படைத்துள்ளது.

இந்நிலையில் இந்த தோல்வி ஏன் என்பது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய டெல்லி அணியின் துணை பயிற்சியாளருமான ஷேன் வாட்சன் விளக்கம் அளித்துள்ளார். அங்கே அவர் கூறியதாவது:-

மும்பை தொடர்ந்து தோல்வி அடைந்து பட்டியலின் கடைசி இடத்தில் இருப்பது எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. காரணம் அவர்கள் மெகா ஏலத்தில் சரியாக செயல்படவில்லை என கருதுகிறேன். மும்பை வீரர் இஷான் கிஷானுக்கு ரூ.15.25 கோடி செலவு செய்துள்ளனர். அவர்
திறமையான வீரர் தான். ஆனால் இத்தனை சம்பளத்தை கொடுத்து அவரை வாங்கியிருக்கக்கூடாது.

அதேபோல இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்சரை எடுத்ததும் மும்பைக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. அவர் நீண்ட நாட்களாக காயம் காரணமாக விலகி இருக்கிறார். அவர் எப்போது வருவார் என்பது தெரியாமலேயே மும்பை இந்தியன்ஸ் அணி அவருக்கும் செலவு செய்து
விட்டது.

இவ்வாறு வாட்சன் விளக்கம் அளித்துள்ளார்.