X

மும்பை அணியில் இடம் பிடித்த தெண்டுல்கர் மகன்

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர். இவரின் மகன் அர்ஜுன் (வயது 21). இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் மும்பை ஜூனியர் அணியில் இடம் பிடித்து விளையாடியிருக்கிறார்.

தற்போது இந்தியாவின் உள்ளூர் டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதற்கான மும்பை அணியில் அர்ஜுன் இடம் பிடித்திருந்தார்.

நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணி ஹரியானாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதன்முறையாக மும்பை சீனியர் அணியில் அர்ஜூன் தெண்டுல்கர் அறிமுகம் ஆனார்.

முதலில் பேட்டிங் செய்த மும்பை 143 ரன்கள் அடித்தது. அர்ஜுன் தெண்டுல்கருக்கு பந்தை எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் 144 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹரியானா களம் இறங்கியது. அந்த அணி 17.4 ஓவரில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.

அர்ஜுன் தெண்டுல்கர் வீசிய 2-வது ஓவரின் முதல் பந்தில் விக்கெட் சாய்த்தார். இறுதியாக 3 ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.