மும்பையில் பழுதடைந்து அந்தரத்தில் நின்ற மோனோ ரெயில்

மும்பையில் செம்பூர்-ஜேக்கப் சர்க்கிள் இடையே உயர்மட்ட பாதையில் மோனோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை மைசூர் காலனி – பெர்ட்டிலைசர் டவுன்சிங் மோனோ ரெயில் நிலையங்களுக்கு இடையே மோனோ ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. திடீரென அந்த மோனோ ரெயிலில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த மோனோ ரெயில் நடுவழியில் நின்றது. நடுவழியில் அந்தரத்தில் நின்ற அந்த மோனோ ரெயிலால் அதில் இருந்த பயணிகள் பீதி அடைந்தனர்.

இந்த நிலையில், ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு அதில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர் மோனோ ரெயிலில் கோளாறை சரி செய்யும் பணி நடந்தது. மோனோ ரெயில் சேவை பாதிப்பால் பயணிகள் அவதி அடைந்தனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools