X

முன்னாள் ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மரணம்!

கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். சமதா கட்சியின் நிறுவனரான இவர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்புத்துறை மந்திரியாக பணியாற்றியவர். அவரது பதவிக்காலத்தில்தான் கார்கில் போர் நடந்தது. போக்ரான் அணு ஆயுத சோதனை நடத்த வேண்டும் என்பதை வெளிப்படையாக ஆதரித்தவர்.

வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் ரெயில்வே மந்திரியாக ஜார்ஜ் பெர்னாண்டஸ் பதவி வகித்தார். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையிலும் அமைச்சராக பணியாற்றினார். கடைசியாக 2009 ஆகஸ்ட் முதல் 2010 ஜூலை மாதம் வரை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார்.

அதன்பின்னர் முதுமைசார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிய ஜார்ஜ் பெர்னாண்டஸ் (வயது 88), நீண்டகாலமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், டெல்லியில் இன்று ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்.

Tags: south news