பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி தமிழகம் முழுவதும் அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்ற காரை நோக்கி கற்கள் மற்றும் காலணி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பியபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஈபிஎஸ்க்கு எதிராக முழக்கமிட்டபடி சிலர் வீசிய கற்கள் மற்றும் காலணி, அவரது காருக்கு அருகே விழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக இருவரை போலீசார் பிடித்து விசரணை நடத்தி வருகின்றனர்.