முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்
நடிகை சாந்தினி அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர், சொகுசு வசதிகளோடு இருந்ததை போலீசார் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சைதாப்பேட்டை சிறையில் இருந்து மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
மேலும், மணிகண்டனுக்கு சொகுசு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்த காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.