Tamilசெய்திகள்

முன்னாள் அமைச்சர் தங்கமணி மகன், மனைவி மீது வழக்கப் பதிவு

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு உள்ளிட்ட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

போலீசார் தங்கமணி, அவரது மனைவி, மகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2016-2020 அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக 4.85 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், முறைகேடாக சேர்த்த சொத்துகளை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ததாக, முதல்கட்ட தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.