X

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

அ.தி.மு.க. ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் தங்கமணி. அவரது வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் மட்டும் 14 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

கோவை, கரூர், நமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் சில இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்து போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.