பண்ருட்டி அதிமுக முன்னாள் சட்டசபை உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் மீதான மோசடி வழக்கு தொடர்பாக சோதனை நடைபெற்று வருகிறது.
2011-2016 வரை சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் பண்ருட்டி நகராட்சி தலைவராக செயல்பட்டு வந்தார். பன்னீர்செல்வம் நகராட்சி தலைவராக இருந்தபோது இருசக்கர வாகன நிறுத்துமிடம் டெண்டரில் ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.