முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ராஜமாணிக்கம் மரணம்!
தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆர்.ராஜமாணிக்கம் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 76.
எம்ஜிஆர் ஆட்சியின்போது 1984-87 வரை அரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் முருகன், கடந்த சட்டமன்றத் தேர்தலில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அமமுகவில் உள்ள இவர், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.