ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – மேகா ஆகாஷ், இந்துஜா, உபென் படேல், சுஹாசினி மணிரத்னம், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்க, மசாலா பிக்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `பூமராங்’.
படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி இருக்கும் இந்த படத்தை முதலில் டிசம்பர் 21-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் அதே நாளில் தான் விஜய் சேதுபதியின் சீதக்காதி, தனுஷின் மாரி 2, ஜெயம் ரவியின் அடங்க மறு, விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருக்கின்றன.
இதனால் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் பூமராங் ஒரு வாரம் தள்ளிப்போய் வருகிற டிசம்பர் 28-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் தான், ஜி.வி.பிரகாஷின் சர்வம் தாள மயம் படமும் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு, அர்ஜுன் ரெட்டி புகழ் ரதன் இசையமைக்க, செல்வா ஆர்.கே. படத்தொகுப்பை கவனித்திருக்கிறார்.