Tamilசெய்திகள்

முத்திரைத்தாள் வரி குறைப்பு – பட்ஜெட்டில் தகவல்

தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும்
* சிறு-குறு, நடுத்தர தொழில்களுக்கான வட்டி மானியம் 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தப்படும்
* சேலம் மாவட்டம் புத்திரகவுண்டம்பாளையம், உமையாள்புரம் ஆகிய இடங்களில் புதிதாக சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்
* முத்திரைத்தாள் வரி 1 சதவீதத்திலிருந்து 0.25 சதவீதமாக குறைக்கப்படும்
* ஜவுளித்துறைக்கு ரூ.1,224 கோடி நிதி ஒதுக்கீடு- ஓ. பன்னீர்செல்வம்
* தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.1,53 கோடி நிதி ஒதுக்கீடு
* இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.281 கோடி நிதி ஒதுக்கீடு
* மகளிர் நல திட்டங்களுக்கு ரூ.78,796 நிதி ஒதுக்கீடு
* வருவாய் பற்றாக்குறை 2021-22ல் ரூ.16,893.19 கோடி, 2022-23ல் ரூ.10,697.47 கோடியாக இருக்கும்
* அல் கெப்லா குழுமத்தின் பெட்ரோலிய சுத்திகரிப்பு வளாகம் ரூ.49,000 கோடி செலவில் அமைக்கப்படும்
* பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.1,064 கோடி ஒதுக்கீடு
* தமிழகத்தின் 37 மாவட்டங்களிலும் முதியோர் ஆதரவு மையங்கள் தொடங்கப்படும்
* தென்காசியில் எலுமிச்சை மையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம் அமைக்கப்படும்
* தமிழகத்தில் அனைத்து பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு ரூ.375 கோடி ஒதுக்கீடு
* சாரபங்கா நீரேற்று பாசன திட்டத்தை செயல்படுத்த பட்ஜெட்டில் ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு
* வருவாய் வரவினங்கள் ரூ.5,860 கோடி குறைந்து செலவினம் ரூ.4,896 கோடியாக உயர்ந்ததே பற்றாக்குறைக்கு காரணம்
* ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்களின் உயர்கல்வி ஊக்கத்தொகைக்கான மத்திய அரசின் தொகை குறைப்பு
* விழுப்புரம் அழகன்குப்பம், செங்கல்பட்டு ஆலம்பரைக் குப்பத்தில் மீன்பிடித்துறைமுகம் அமைக்க ரூ.235 கோடி
* ஊரக வளர்ச்சித்துறைக்காக ரூ.23,161 கோடி நிதி ஒதுக்கீடு
* வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் இடைவெளியை நிரப்பும் ஊக்க நிதிக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு
* குடிமராமத்து திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *