X

முத்தரப்பு மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் – இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா, இந்தியா இன்று மோதல்

தென்ஆப்பிரிக்கா, இந்தியா, வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 3 நாடுகள் பங்கேற்றுள்ள பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. ஒரு அணி மற்ற இரு அணிகளுடன் இரண்டு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதி போட்டியில் விளையாடும்.

வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணி இறுதி போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டி ஈஸ்ட் லண்டனில் நடக்கிறது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, சன் லூஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.