முத்தரப்பு கிரிக்கெட் தொடர் – ஆப்கானிஸ்தான், வங்காள் தேசம் இடையிலான இறுதிப் போட்டி மழையால் ரத்து

வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் வங்காளதேசம், ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதிய டி20 முத்தரப்பு தொடர் நடைபெற்றது.

லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்த வங்காள தேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

டாக்காவில் நேற்று இறுதிப்போட்டி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பலத்த மழை காரணமாக டாஸ் கூட சுண்டப்படாமல் இறுதிப்போட்டி கைவிடப்பட்டது.

இதையடுத்து, வங்காள தேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் கோப்பையை பகிர்ந்து கொண்டன. ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் ரஹ்மதுல்லா கர்பாஸ் தொடர் நாயகனாக தேர்வானார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news