தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை பெற்றவர் நடிகை பிரியாமணி. அதன்பின் நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றார். தொடர்ந்து தமிழில் மசாலா படங்களிலும் நடித்து வந்தார்.
ஒரு கட்டத்தில் தமிழ்சினிமாவை விட்டு விலகி தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தினார். பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும்போதே திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட்டு வந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்த பிரியாமணி, இதன் மூலம் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
இந்நிலையில், முத்த காட்சியில் நடிக்க எனக்கு அனுமதியில்லை என்று நடிகர் பிரியாமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, திருமணத்திற்கு பிறகு முத்த காட்சிகளில் நடிக்க கூடாது என முடிவு செய்து கொண்டேன். அதற்கு எனக்கு அனுமதி இல்லை. அது ஒரு கதாபாத்திரம் தான் என்ற போதிலும் ஒரு பெண்ணாக அதனால் மிகவும் கஷ்டப்படுவேன்.
முத்த காட்சிகளில் நடிப்பதை கணவரும் விரும்ப மாட்டார். அப்படி நடித்தால் கணவருக்கு பதில் சொல்ல வேண்டி வரும். நடிக்க ஒப்பந்தமாகும் முன்பே இதுகுறித்து சொல்லி விடுவேன். நான் நடிக்கும் படங்களை என் இரு வீட்டு குடும்பத்தினரும் பார்ப்பார்கள் முத்த காட்சிகளில் நடித்து அவர்கள் மனதை கஷ்டப்படுத்துவதில் எனக்கு விருப்பமில்லை என்று பேசினார்.