X

முதியோர்களுக்கு சலுகை வழங்க மத்திய அரசிடம் ரூ.1,500 கோடி இல்லையா? – ராகுல் காந்தி கேள்வி

கொரோனா தொற்று காரணமாக சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. அப்போது பயணக் கட்டணத்தில் வழங்கப்பட்டு வந்த அனைத்துவித சலுகைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மத்திய ரெயில்வே அமைச்சகம் அறிவித்திருந்தது.

இதற்கிடையே, கொரோனா பாதிப்பு குறைந்ததால் ரெயில் சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியது. அனைத்து ரெயில்களும் வழக்கம்போல் இயங்கின. ஆனாலும், மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகைகளை மத்திய அரசு இன்னும் அமல்படுத்தவில்லை. மூத்த குடிமக்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த சலுகை மீண்டும் தொடரும் முடிவில் அரசு இல்லை என மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ரூ.911 கோடிக்கு விளம்பரச் செலவுகள், ரூ.8,400 கோடிக்கு புதிய விமானம், ஆண்டிற்கு ரூ.1,45,000 கோடி முதலாளியின் நண்பர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால், முதியோர்களுக்கு ரெயில் பயணத்தில் சலுகை வழங்கிட அரசிடம் ரூ.1,500 கோடி இல்லையா? நண்பர்களுக்காக நட்சத்திரங்களை கூட உடைப்பார், ஆனால் ஒவ்வொரு பைசாவிற்கும் மக்களை ஏங்க விடுவார் என பிரதமரை சாடியுள்ளார்.