முதல் வெற்றியை என் மனைவிக்கு அர்ப்பணிக்கிறேன் – சிஎஸ்கே கேப்ட ரவீந்தர் ஜடேஜா கருத்து

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 216 ரன்கள் குவித்தது. உத்தப்பா 88 ரன்னில் அவுட்டானார். ஷிவம் துபே 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அடுத்து ஆடிய பெங்களூரூ அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷபாஸ் அகமது 41 ரன் எடுத்தார். தொடர்ந்து
4 தோல்விக்கு பிறகு சென்னை அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், வெற்றிக்கு பிறகு கேப்டன் ஜடேஜா பேசுகையில், கேப்டனாக பெறும் முதல் வெற்றி எப்போதும் சிறப்பானது. எனவே, முதல் வெற்றியை எனது மனைவிக்கு அர்ப்பணிக்க
விரும்புகிறேன்.

முந்தைய நான்கு ஆட்டங்களில் எங்களால் எல்லையை கடக்க முடியவில்லை. ஆனால் ஒரு குழுவாக நாங்கள் நன்றாக மீண்டு வந்துள்ளோம்.

நான் இன்னும் கற்றுக்கொண்டு ஒவ்வொரு விளையாட்டிலும் சிறப்பாக செயல்பட முயற்சிக்கிறேன் என தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools