Tamilசெய்திகள்

முதல் முறை வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை பதிவு செய்ய வேண்டும் – பிரதமர் மோடி பதிவு

குஜராத்தில் இன்று முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- குஜராத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்களிக்கும் அனைவரையும், குறிப்பாக முதல் முறை வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை பதிவு எண்ணிக்கையில் பயன்படுத்துமாறு அழைக்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.