டெல்லியில் விமான நிலைய எக்ஸ்பிரஸ் லைன் வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த தடத்தில் 6 ரெயில் நிலையங்கள் உள்ளன. 22 கி.மீ. நீளம் கொண்ட இப்பாதையில் பயண நேரம் 24 நிமிடங்கள் ஆகும். தினமும் 60 பயணிகள் இந்த பாதையில் பயணம் செய்து வருகிறார்கள்.
பூமிக்கு அடியில் செல்லும் இந்த மெட்ரோ ரெயில் வழித்தடத்தில், இலவச அதிவேக ‘வைபை‘ வசதி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. டெல்லி மெட்ரோ ரெயில் தலைவர் மங்கு சிங், ஓடும் ரெயிலில் இதை தொடங்கி வைத்தார். ரஷியா, தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் மெட்ரோ ரெயிலில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ஆசிய நாடுகளில், இதுவே முதல்முறை ஆகும்.
படிப்படியாக, மற்ற வழித்தடங்களிலும் இலவச ‘வைபை‘ கொண்டுவரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.