Tamilசினிமா

முதல் நாளே படப்பிடிப்புக்கு கட் அடித்த உதயநிதி ஸ்டாலின்

 

பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. ராதா கிருஷ்ணகுமார் இயக்கி இருக்கும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் உதயநிதி ஸ்டாலின் கலந்துக் கொண்டார். அப்போது அவர் பேசும்போது, ‘ராதே ஷ்யாம் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நான் நடிக்கும் மாமன்னன் படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு முதல் நாளே நான் கட் அடித்து விட்டு இந்த விழாவிற்கு வந்து இருக்கிறேன். அந்த அளவிற்கு இந்த படம் எனக்கு முக்கியம். ராதே ஷ்யாம் திரைப்படத்தை மார்ச் 11 ஆம் தேதி 175 திரையங்களில் வெளியிடுகிறேன்’ என்றார்.