X

முதல் நாளியேலே 15 உத்தரவுகளை பிறப்பித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் தனது பணிகளை தொடங்கினார். அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே, முந்தைய அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்த சில கொள்கை முடிவுகளை மாற்றியமைத்துள்ளார். கொரோனா நெருக்கடி, குடியேற்றம், இனவாத பிரச்சனை உள்ளிட்ட 15 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார் பைடன்.

கொரோனா நோய்த்தடுப்பு விஷயத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை அதிகரிப்பது தொடர்பான உத்தரவில் முதலில் கையெழுத்திட்டார். அதன்பின்னர், அமெரிக்க-மெக்சிகோ எல்லைச் சுவர் கட்டுமானம் நிறுத்தம், அமெரிக்கா-கனடா இடையிலான எரிவாயு இணைப்பு திட்டமான, கீஸ்டோன் எக்ஸ்.எல். பைப்லைன் திட்டம் ரத்து உள்ளிட்ட உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது தொடர்ப்ன டிரம்ப் நிர்வாகத்தின் முந்தைய உத்தரவை மாற்றி, பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார். அதன்படி, பதவியேற்ற முதல் நாளிலேயே அதற்கான உத்தரவிலும் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.