Tamilவிளையாட்டு

முதல் டெஸ்ட்டில் குல்தீப்பை சேர்க்காதது தவறான முடிவு – முன்னாள் இங்கிலாந்து வீரர் வாகன் கருத்து

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் குல்தீப் யாதவ். கடந்த 3 மாதங்களுக்கு மேலாக டெஸ்ட் அணியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்டில் குல்தீப் யாதவ் இடம்பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்திய அணி நிர்வாகம் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. அனுபவம் குறைந்த சபாஷ் நதீம், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் 11 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில் முதல் டெஸ்டில் குல்தீவ் யாதவை சேர்க்காதது தவறான முடிவாகும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

குல்தீப் யாதவை அணியில் சேர்க்காமல் எடுத்த முடிவு தவறானது. இது ஒரு அபத்தமான முடிவாகும். இப்போது அவர் விளையாடாவிட்டால் எப்போதுதான் ஆடப்போகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.