முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய இயக்குநர் அமீர்

மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அமீர். அப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ரசிகர்களை கவர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன்பின் ராம், பருத்திவீரன், ஆதிபகவன் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இணைந்தார். இவர் யோகி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். நீண்ட இடைவேளைக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கிய ’வடசென்னை’ படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான அமீர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக் கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மரியாதைக்குரிய பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு, இதுவரை பொதுவெளியில் யாருக்கும் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லாத நான், ”சமூகநீதிக் காவலரின் வாரிசு”க்கு முதன் முறையாக இதயம் திறந்த வாழ்த்து மடல்.

சூரிய நெருப்பில் உதித்து..
காரிய இருளைத் தகர்த்து..
ஆருடத்தை பொய்யாக்கி
ஆரியத்தை பொடியாக்கி..

ஆட்சிக் கட்டிலை
அடித்தட்டு மக்களுக்கே..
அர்ப்பணித்த
இந்திய முதல்வனே..!

இன்னும் பல காலம் நீயிருக்க
எல்லாம் வல்ல இறைவனை
பிரார்த்திக்கிறேன் – அது
காலத்தின் தேவை..

சமூக நீதி தழைக்க..
சமய நீதி ஓழிக்க..
சமுதாயம் செழிக்க..
சனநாயகம் சிறக்க..

அன்புடன்
அமீர்

என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools