முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் கூட்டம்! – இன்று தொடங்கியது

சென்னையில் வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் பங்கேற்கும் இரண்டாவது மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட உள்ளது. இந்த மாநாட்டின் முடிவில் புதிய நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் தொடங்குவது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. இதில், உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே இதற்கு முன்பு நடத்தப்பட்ட 2 அமைச்சரவைக் கூட்டங்களிலும், உலக முதலீட்டாளர் மாநாடு மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பல்வேறு தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

2015ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், ரூ.2.42 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்வதற்கான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools