X

முதலீட்டை ஈர்ப்பதற்கான சீர்த்திருத்தங்கள் தொடரும் – அமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லியில் இந்திய, சுவீடன் தொழில் மாநாடு நேற்று நடந்தது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், “இந்தியாவை உலகளவில் மேலும் கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாக மாற்றுவதற்கு ஏற்றவிதத்தில் சீர்திருத்தங்களை தொடர்வதற்கு அரசு திறந்த மனதுடன் இருக்கிறது” என கூறினார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், “பட்ஜெட்டுக்கு பின்னர் பல்வேறு துறையினருடன் பேச்சு நடத்தி, அவர்களது பிரச்சினைகளை அறிந்து, அதற்கு தீர்வு காண அடுத்த பட்ஜெட் வரை காத்திருக்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி குறைப்பும், கட்டமைப்பு சீர்திருத்தமாக அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டார். சீர்திருத்தங்களில் எங்கள் அரசு நம்பிக்கை கொண்டிருப்பதை இந்த ஒரு நடவடிக்கையே எடுத்துக்காட்டுகிறது, நாங்கள் இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்க இருக்கிறோம் எனவும் அவர் கூறினார்.

Tags: south news