முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த இஸ்ரோ தலைவர் சோமநாத்

இஸ்ரோ தலைவர் சோமநாத் சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முதல்வரை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சந்திரயான் மாடல் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது. குலசேகரப்பட்டினத்தில் 2வது ஏவுதளம் தயாராக உள்ளது. 2 ஆண்டுகளில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

ஏவுதளத்துக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துதர கேட்டுள்ளோம். தொழிற்துறை விண்வெளி மற்றும் பாதுகாப்பில் தமிழக அரசு உறுதுணையாக உள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழக வீரர், வீராங்கனைகள் 17 பேர் பதக்கங்கள் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news