Tamilசெய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீர் சந்திப்பு!

டெல்லி விமான நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலை டெல்லிக்கு சென்றார். பின்னர், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை ஜனாதிபதி மாளிகையில் நேரில் சந்தித்து பேசிய ஸ்டாலின், கிண்டியில் உள்ள பல்னோக்கு மருத்துவமனை திறந்து வைக்க அழைப்பு விடுத்தார். இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்ற ஜனாதிபதி திரௌபதி முர்மு வரும் ஜூன் மாதம் 5ம் தேதி தமிழகத்திற்கு வருவதாக உறுதி அளித்தார்.

இந்நிலையில், ஜனாதிபதியை சந்தித்து சென்னை புறப்பட்ட மு.க.ஸ்டாலின், டெல்லி விமான நிலையத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தற்செயலாக சந்தித்தபோது பேசினார்.