முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் 17-ம் தேதி கூடுகிறது. மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு அவை ஒத்தி வைக்கப்படும். பின்னர் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் நாட்கள் குறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும்.

சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை இன்று மாலை 5 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர். தாக்கல் செய்யப்பட உள்ள மசோதாக்கள் குறித்து அமைச்சரவை கூடி ஆலோசிக்க உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools