முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் பார்க்க குவிந்த தமிழர்கள் – வியப்பில் துபாய் அரசு

 

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் அரசுப் பயணமாக துபாய், அபுதாபி சென்றுள்ளார்.

அவருக்கு துபாயில் மிகப் பிரமாண்டமாக “நம்மில் ஒருவர் நம்ம முதல்வர்” என்ற நிகழ்ச்சி மூலம் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற முதல்-அமைச்சர் ஸ்டாலினை பார்ப்பதற்காக, ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் திரண்டனர்.

இதனால் துபாய் நகரமே ஸ்தம்பித்துபோனது. இதன் காரணமாக துபாய் காவல் துறையினர் திணற நேரிட்டது. துபாய் அரசாங்கமும் அந்த மிகப் பெரிய கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிப் போய் விட்டனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகழ் உலகம் முழுக்கப் பரவி இருக்கிறது என்பது இதன்மூலம் உறுதியாகி உள்ளது.

ஒட்டுமொத்த துபாய் மக்களையும், துபாய் அரசாங்கத்தையும் மிரள வைத்து வியக்கவைத்து இருப்பது மட்டுமல்லாமல், “யாருப்பா இவரு?’’ என்கிற அளவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் அமைந்துள்ளது.

பிரதமர்களுக்கே கிடைக்காத மதிப்பும், மரியாதையும், ஒரு மாநில முதல்வருக்கு கிடைத்து இருப்பது ரொம்பவே ஆச்சரியப்பட வைத்து இருக்கிறது.

துபாய்க்கு எத்தனையோ நாட்டில் இருந்து பிரதமர்கள் வந்து விட்டு செல்கிறார்கள். ஆனால் யாருக்குமே இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்தது இல்லை.

முதன்முதலாக ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு என்பது ரொம்பவே பிரமிக்க வைத்து இருப்பதாக துபாய் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் பார்ப்பதற்காக ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பேர் வந்து, வரிசையில் நின்று இருந்தனர்.

அரங்கு முழுவதும் மக்கள் வெள்ளம் நிரம்பியதால் ஏராளமானோர் வெளியே நின்று இருந்தனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாயில் சென்ற இடங்களில் எல்லாம் வரலாறு காணாத அளவிற்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் மு.க.ஸ்டாலினை பார்ப்பதற்காக பல அரேபியர்களும் அங்கே வந்து இருந்தனர்.

ஒரு மாநிலத்தோட முதல்வருக்கு இவ்வளவு பெரிய வரவேற்பா? என்று துபாய் மக்கள் ஆச்சரியப்பட்டனர். துபாய் அரசாங்கமும் வியந்து போனது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களைச் சந்தித்துப் பேசியதோடு மட்டுமில்லாமல், பல்வேறு உலக முதலீட்டாளர்கள்கிட்டே பல ஒப்பந்தங்களைச் செய்திருக்கிறார்.

இதன் மூலம் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான தமிழர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இவ்வாறு www.a23.com என்ற இணையதளத் தொலைக்காட்சி சிறப்புச் செய்தி வெளியிட்டுள்ளது.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools