முதலமைச்சர் புகைப்படத்தை தவறாக சித்தரித்து முகநூலில் வெளியிட்ட பா.ஜ.க நிர்வாகி கைது
கடலூர் மேற்கு மாவட்ட பா.ஜனதா ஐ.டி. விங் நிர்வாகி ஜெயக்குமார். இவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் படத்தை தவறாக சித்தரித்து முகநூலில் பதிவிட்டதாக நெல்லை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெயக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் படத்தை தவறாக சித்தரித்து முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து திருநெல்வேலி மாவட்டச்சை சேர்ந்த தி.மு.க.வினர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அவர்கள் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று அதிகாலை கடலூர் மாவட்டம் கீரப்பாளையத்தில் ஜெயக்குமாரை கைது செய்து திருநெல்வேலிக்கு அழைத்துச் செல்ல உள்ளனர்.