முதலமைச்சர் பழனிசாமி நாளை திருப்பூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார்

அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 11-ந்தேதி (நாளை) காலை 9 மணிக்கு திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அவினாசி தொகுதிக்கு உட்பட்ட அவினாசி பஸ் நிலையம் அருகில் பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து, திருப்பூர் வடக்கு தொகுதி பாண்டியன் நகர், திருப்பூர் தெற்கு தொகுதி சி.டி.சி. கார்னர், காங்கேயம், மதியம் 2.30 மணிக்கு காங்கேயம் விவசாயிகளுடன் கலந்துரையாடல். தாராபுரம், மடத்துக்குளம் நால்ரோடு பகுதிகளில் வாக்கு சேகரிப்பு. மாலை 6.55 மணிக்கு மடத்துக்குளம் இளைஞர் பாசறை-இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்.

12-ந்தேதி காலை 9.50 மணிக்கு உடுமலைபேட்டை பஸ் நிலையம், பல்லடம் பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools