முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த கவுதம் கம்பீர்
கொரோனா காலகட்டத்தில், டெல்லி அரசின் மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் டெல்லி மக்களுக்கே சிகிச்சை அளிக்கப்படும் என்று முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார். இதற்கு பல்வேரு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி மருத்துவமனை டெல்லி மக்களுக்கே என்ற முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் அறிவிப்பு முட்டாள்தனமானது என பா.ஜ.க. எம்.பி., கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ஆளுநர் நல்ல முடிவெடுத்தார். டெல்லி மருத்துவமனைகளில் பிற மாநில நோயாளிகளுக்கு இடமில்லை என்ற உத்தரவு முட்டாள்தனமானது, இந்தியா என்பது ஒன்று. நாம் இந்த தொற்றை ஒன்றிணைந்தே எதிர்த்துப் போராட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.