‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்ற வார்த்தை முழங்கி இன்றோடு ஒருவருடம் ஆகிவிட்டது. பதவி ஏற்பு முதல் அனைத்திலும் அதிரடி காட்டினார் ஸ்டாலின். First Impression is the best Impression எனும் கூற்று போல், கொரோனா எனும் அரக்கணை திறம்பட கையாண்டு, நோய் பரவலை குறைத்ததே திமுகவின் ஆட்சிக்கு முழு முதற்சாட்சியாய் அமைந்தது.
அன்று தொடங்கி இன்று வரை, திமுக அரசு அதிரடியாக கையில் எடுத்த முடிவுகள் குறித்து பார்க்கலாம்.
பெண்களுக்கு இலவச பேருந்து, ஆவின் பால் விலை குறைப்பு, இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் திட்டம், ‘இன்னுயிர் காப்போம்’ மருத்துவ திட்டம், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, நீட் தீர்மானம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டம், சமூக நீதி நாள் அறிவிப்பு, சமத்துவ நாள் அறிவிப்பு, நான் முதல்வன் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என இன்னும் பல திட்டங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
முதல் இன்னிங்ஸில் சமூக நீதி, சமத்துவம் என சிக்ஸர்களாலும், பவுண்டரிகளாலும் அடித்து ஆடிய திமுக, எதிர்வரும் ஆண்டுகளில் என்ன என்ன திட்டங்களை செயல்படுத்த போகிறது, என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்….