Tamilசெய்திகள்

முடிவுற்ற சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் கொடுங்கையூரில் ரூ.170.97 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 120 மில்லியன் லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்; நெசப்பாக்கத்தில் ரூ.47.24 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு ஒரு கோடி லிட்டர் உயர்தர மறுசுழற்சி நீர் நிலையம்; போரூரில் நாளொன்றுக்கு 60 லட்சம் லிட்டர் திறன் கொண்ட புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம்; புழல், புத்தகரம், சூரப்பட்டு மற்றும் கதிர்வேடு பகுதிகளுக்கு ரூ.82.61 கோடி மதிப்பீட்டில் விரிவான குடிநீர் வழங்கல் திட்டம்;

சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் கீழ் ரூ.3.32 கோடி மதிப்பீட்டில் கூவம் ஆற்றின் கரையோரம் சூளைமேட்டில் 12 லட்சம் லிட்டர் திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்; அடையாற்றில் ரூ.16.16 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் மூலமாக கலக்கும் கழிவுநீரை இடை மறித்து அமைக்கப்பட்டுள்ள மாற்று வழிகள்; ஜாபார்கான்பேட்டை மற்றும் சாமியார் தோட்டம் பகுதிகளில் ரூ.10.62 கோடி மதிப்பீட்டில் அடையாற்றில் நேரடியாக கலக்கும் கழிவுநீரை இடைமறித்து கழிவுநீரிறைக்கும் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள்; சென்னை நதிகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் அடையாற்றில் மழை நீர் வடிகால் மூலமாக கலக்கும் கழிவுநீரை சுத்திகரிக்க ரூ.4.31 கோடி மதிப்பீட்டில் நாளொன்றிற்கு 0.6 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட மாற்று முறை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்;

அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில் மற்றும் மாம்பலம் கால்வாயில் நேரடியாக கலக்கும் கழிவுநீரை இடைமறித்து சுத்திகரிக்க ரூ. 5.04 கோடி மதிப்பீட்டில் தாடண்டர் நகரில் நாளொன்றிற்கு 4 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையத்திற்கு அனுப்பும் பணி; அடையாற்றில் நேரடியாக கலக்கும் கழிவுநீரை இடைமறித்து நந்தனம் விரிவாக்கம், டர்ன் புல்ஸ் ரோடு பகுதியில் தற்போது பயன்பாட்டில் உள்ள கழிவுநீர் அமைப்போடு இணைக்கப்பட்டு, ராதாகிருஷ்ணபுரம் குடிசை பகுதிகளுக்கு ரூ.6.36 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள கழிவுநீர் திட்டப் பணிகள்;

ஐஸ்ஹவுஸ், கீரிம்ஸ் ரோடு, கோடம்பாக்கம், வடக்கு மயிலாப்பூர், தெற்கு மயிலாப்பூர், நந்தனம், டி.எஸ். பார்க், தாமஸ்ரோடு, சுதந்திர தின பூங்கா பகுதிகளில் அமைந்துள்ள கழிவு நீரேற்று நிலையங்களில் ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டுப் பணிகள்; கிண்டி மற்றும் ஈக்காட்டுத்தாங்கலில் ரூ.18.73 கோடி மதிப்பீட்டில் இடைமறித்தல் மற்றும் மாற்றுவழிகள் அமைக்கப்பட்ட பணிகள்; ஆலந்தூர், மாதவ பெருமாள் மேற்கு தெருவில் ரூ.88 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சாலையோர நீரேற்று நிலையம்; மாம்பலம் கால்வாய் வழியாக அடையாற்றில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிக்க ரூ. 14.21 கோடி மதிப்பீட்டில் தாடண்டர் நகரில் 4 (நாளொன்றுக்கு 4 மில்லியன் லிட்டர்) கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்.

கீழ்ப்பாக்கத்தில் ரூ.7.05 கோடி மதிப்பீட்டில் நவீன குடிநீர் மற்றும் கழிவுநீர் பரிசோதனைக் கூடம்; நெசப்பாக்கம், தி.நகர், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, சிஐடி நகர், மேற்கு அரும்பாக்கம் பகுதிகளில் அமைந்துள்ள கழிவுநீர் உந்து நிலையங்களில் ரூ. 2.54 கோடி மதிப்பீட்டிலான மேம்பாட்டுப் பணிகள்; சின்னதம்பி தெரு, மந்தவெளிப்பாக்கம், பார்தசாரதி ராம்நகர், அயோத்தி குப்பம், நமச்சி வாயபுரம், அருணாச்சலம் தெரு, லாக்நகர், அன்பு காலனி, சீதம்மாள் காலனி, அமுதம் காலனி, கிருட்டிணம்மாள் ரோடு, குமாரப்ப ரோடு, பல்லகுமனியம் மற்றும் புலியூர்புரம் பகுதிகளில் அமைந்துள்ள கழிவு நீரேற்று நிலையங்களில் ரூ.2.38 கோடி மதிப்பீட்டிலான மேம்பாட்டு பணிகள்; நொளம்பூர் கால்வாய் செயின்னேஜ் 2120-ல் இருந்து முகப்பேர் கழிவு நீரேற்று நிலையம் வரை கழிவு நீர் கலக்குமிடங்களை தடுப்பதற்காக ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் இடைக்குறுக்கீடு கழிவுநீரகற்று கட்டமைப்பு அமைக்கப்பட்டு, கழிவுநீரை மாற்று பாதையில் திருப்பும் பணி.

சென்னை, கே.கே. நகர், விருகம்பாக்கம், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, சத்தியமூர்த்தி பிளாக், பாரதிதாசன் காலனி, திரு நகர், சாரதி நகர், கோத்தமேடு, குலசேகரபுரம், காந்திநகர், விஓசி நகர், அபித் காலனி, சாமியார் தோட்டம் மற்றும் அழகிரி நகர் பகுதிகளில் அமைந்துள்ள கழிவுநீர் உந்து நிலையங்களில் ரூ.1.98 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப்பணிகள் என மொத்தம் ரூ.398.51 கோடி மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் 18 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.